உருளைக்கிழங்கு வெங்காய தோசை செய்முறை, potato onion dosai recipe in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • தோசை மாவு – 3 கப்
  • உருளைக்கிழங்கு – 200 கிராம் (வேக வைத்து மசித்தது)
  • வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிது
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதனை சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தோசை போன்று ஊற்றி, பின் அதன் மேல் வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, எண்ணெய் ஊற்றி, 3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து, பின் அதனை மடித்து பரிமாற வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை தயார்.

இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Loading...
Categories: Dosai recipes in tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors