எக்லெஸ் சாக்லெட் கேக், Eggless Chocolate Cake, receipe in tamil, tamil language

என்னென்ன தேவை?

 • மைதா – 250 கிராம்,
 • கோகோ பவுடர் – 4 டேபிள்ஸ்பூன்,
 • வெண்ணெய் – 100 கிராம்,
 • சர்க்கரை – 60 கிராம்,
 • சூடான பால் – 1/2 கப்,
 • கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்,
 • வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
 • பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
 • சோடா உப்பு – 1 டீஸ்பூன்.

  மேலே அலங்கரிக்க சாக்லெட் சிரப்…

மில்க் சாக்லெட் பார் (குக்கிங் சாக்லெட்) – 250 கிராம்,
வெண்ணெய் – 75 கிராம்.

தண்ணீரை கொதிக்க வைத்து அதன்மேல் தவாவை வைத்து சாக்லெட்டையும், வெண்ணெயையும் உருக்கவும்.

எப்படிச் செய்வது?

வெண்ணெய், சர்க்கரை மற்றும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, கோகோ பவுடர், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து, சூடான பால் ஊற்றி ஹான்ட் பீட்டர் கொண்டு நன்கு கலந்து வெண்ணெய் தடவிய கேக் டின்னில் கொட்டி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 30-35 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்து ஆறவைத்து, அதன் மேல் சாக்லெட் சிரப் ஊற்றி ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து பின்பு பரிமாறவும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil

Leave a Reply


Sponsors