எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, oil kaththarikkaai kulambu recipe in tamil, tamil samayal kurippu

இந்த குழம்பின் சுவை தேவாமிர்தம் போல் சுவையாக இருக்கும்.

இதற்கு நாம் ஒய்லட் நிற கத்திரிக்காயை பயன்படுத்துவதே உத்தமம். அதுவும் பிஞ்சு கத்திரிகாயாக இருந்தால் மிகவும் பெர்பெக்ட்.

இந்த குழம்பை அடுத்த நாள் எடுத்து வைத்து உண்டால் சுவை இரடிப்பாகும்.

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க
மரசெக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
பூண்டு 8 பற்கள் ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 இன்ச்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
குரு மிளகு 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது)
தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
முழு முந்திரி பருப்பு 8

குழம்பு வைக்க
மரசெக்கு கடலெண்ணய் 6 மேஜைக்கரண்டி
கடுகு 1/4 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் 2
கறிவேப்பிலை 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் 14
புளி 1 எலுமிச்சம்பழ அளவு
பொடித்த வெல்லம் 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பிஞ்சு கத்திரிக்காய் 10

செய்முறை
1. வடச்சட்டியை அடுப்புல வைத்து மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

2. அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்துகோங்க , பின்பு அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள், அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாய், மற்றும் குரு மிளகு சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

3. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வைக்க வேண்டும். அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க. பிறகு அடுப்பை அணைத்து விட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும்.

4. வடச்சட்டியில் வறுத்து ஆற வைத்துள்ள கலவையை மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும், அதனுடன் முந்திரி பருப்பு, தேங்காய் துருவல், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து அதனுடன் தேவையான அளவிலான தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

5. இப்பொழுது பிஞ்சு கத்திரிகாயை தண்ணீரில் அலசி , அதன் பிறகு கத்திரிகாயின் காம்பை நீக்கிவிட வேண்டும். அதன் பிறகு கத்திரியின் மேல் மட்டும்” +” வடிவத்தில் வெட்டி கொள்ளவும். அதனுள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சிறிது ஸ்பூன் கொண்டு ஊற்றி நிரப்பவும்.

6. பிறகு வடச்சட்டியை அடுப்புல வைத்து அதில் 4 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் மசாலா கலவை நிரப்பபட்ட பிஞ்சு கத்திரிகாயை காய்ந்த எண்ணெய்ல போட்டு நன்றாக சிறுதீயில் பொன்னிறமாக ஆகும் வரை பொறுமையாக , கத்திரிகாய் உடைந்து விடாமல் வதக்கவும். கத்திரிகாயின் அனைத்து பகுதிகளும் காய்ந்த எண்ணெய் பட்டு வேகவிடவும். நன்றாக பொன்னிறமாக வதக்கிய பின்னர் அதை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.

7. இச்சமயத்துல வடச்சட்டியில் மீண்டும் இரண்டு மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், அதில் வெந்தயம், கறிவேப்பில்ல மற்றும் வரமிளகாய் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. இப்பொழுது அதில் மீதமுள்ள அரைத்த மசாலா கலவையை வடச்சட்டியில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். இந்த சமயத்துல புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். பிறகு அதை நன்றாக விரல்களால் அழுத்தி புளி கரைசலை பிழிந்து கொள்ளவும்.

9. மசாலா கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேலையில் புளி கரைசலை ஊற்றி , அதனுடன் தேவையான அளவிலான தண்ணீர் மற்றும் பொடித்த வெல்லம் அதனுடன் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது அதில் எண்ணெய்ல வதக்கி வைத்துள்ள கத்திரிகாயை சேர்த்து குழம்புல சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

10. குழம்பு நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு சுடுசாதத்துடன் மரசெக்கு நல்லெண்ணய் விட்டு கொண்டு பரிமாறவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors