எப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா? இப்படி செஞ்சு பாருங்க, white pongal recipe in tamil, tamil samayal kurippu

பாசிப்பருப்பு – 3/4 கப்

அரிசி – 3/4 கப்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – 1 அங்குலம் (துருவியது)

கறி வேப்பிலை – 8-9

பச்சை மிளகாய் – 5-6 கீறியது

கொத்தமல்லி இலைகள் – 1/2 கப் (நறுக்கியது)

நுனிக்கிய மிளகுத்தூள் – 3/4 டேபிள்

ஸ்பூன் முந்திரி பருப்பு – 8-10 (உடைத்தது )

மஞ்சள் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்

உப்பு – 3/4 டேபிள் ஸ்பூன்

நெய் – 11/4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 6 கப் +1 கப்

ஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும்

பாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும்

அதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் நன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும் 4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும் நன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும் அதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்

இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும் நன்றாக கிளறவும் பிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்

கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும் சமைத்த சாதம் மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்

பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும் இதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்

பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும் பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்

பிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும் சுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி பரிமாறவும்

 

 

 

Loading...
Categories: pongal receipies in tamil

Leave a Reply


Sponsors