கத்திரிக்காய் ஊறுகாய், kaththarikkaai urukaai, receipe in tamil

தேவையானவை:
கத்திரிக்காய் – 500 கிராம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, மிளகாய்தூள் – 50 கிராம், வெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: 
கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, ‘கட்’ செய்யவும்.  புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்திரிக்காயுடன் கலக்கவும். அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்… கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.
Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors