கம்ப்யூட்டரும்… கண்களும், computer with our eye in tamil, tamil healthy tips

கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள்

கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வைகோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.

யாருக்கு பாதிப்பு ஏற்படும்

தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.

கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்

கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்க வேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.

20-20-20 விதி

கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும். அரு காமையில் பார்ப்பது கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதற்கு சமமாகும். பழைய சி.ஆர்.டி மானிட்டர்களை பயன்படுத்துவோர் ஆன்டிகிளார் ஸ்க்ரீன் மானிட்டருக்கு முன்பாக மாட்டிக் கொள்ளலாம். புதிய எல்.இ.டி மானிட்டர்களுக்கு இது தேவையில்லை. மின் விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் கண்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏர் கண்டிஷனர் ஏசி காற்று நேராக முகத்தில் அல்லது கண்களில் படும் படியாக அமரக்கூடாது.

நாம் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்கள் உலர்ந்து போவதை தவிர்க்க முடியும். இருக்கைகள் பின்னால் சார்ந்து அமர வசதியாக இருக்க வேண்டும். பாதங்கள் தரையில் படும் படியாக இருக்க வேண்டும்.

கண் கண்ணாடிகள்

எல்லோருக்கும் பொருந்த கூடிய கம்ப்யூட்டர் கண்ணாடி என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏதாவது பார்வை கோளாறு உள்ளதா என்று கண்டறிந்து அவரவர் தேவைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் கண்ணாடிகள் அணிந்து கொள்வது அவசியம். கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம்.

கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட் ரோமை நிச்சயம் தவிர்க்கலாம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Beauty Tips Tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors