கருப்பட்டி ஆப்பம் செய்முறை, karuppatti aappam seimurai kurippu in tamil, tamil samayal kurippu

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
உளுந்து – 50 கிராம்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – சிறிதளவு
கருப்பட்டி – 400 கிராம்
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

• அரைத்தெடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

• அதோடு கருப்பட்டியைப் பாகு காய்ச்சி வடிகட்டி ஊற்றி நன்றாக கலக்கி மாவை கரண்டியில் எடுத்து, ஆப்ப சட்டியில் வார்த்தெடுங்கள்.

• சுவை மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால் போதும்.

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors