கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கும் நிலக்கடலை, Groundnut prevents health tips in tamil

நிலக்டலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். 100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது

கார்போஹைட்ரேட் – 21 மி.கி, நார்சத்து – 9 மி.கி. கரையும் கொழுப்பு – 40 மி.கி. புரதம் – 25 மி.கி. விட்டமின் – பி1,பி2,பி3,பி5,பி6, சி, கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி, காப்பர் – 11.44 மி.கி, இரும்புச்சத்து – 4.58 மி.கி, மெக்னீசியம் – 168.00 மி.கி, பாஸ்பரஸ் – 376.மி.கி, பொட்டாசியம் – 705.00 மி.கி, சோடியம் -18.00 மி.கி, துத்தநாகச்சத்து – 3.27 மி.கி, தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நியை உள்ளது.

மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது.

இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாப திகழ்கிறது. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம்,பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.

இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது: நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான உண்டு.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors