காரசாமான நெத்திலி மீன் வறுவல் செய்முறை, neththili meen varuval seimurai in tamil, tamil samayal kurippu

தேவையான பொருட்கள்

 • நெத்திலி – 500 கிராம்
 • தேங்காய் எண்ணெய் – வறுக்கத் தேவையான அளவு
 • ஊற வைக்கத் தேவையான பொருட்கள்:
 • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
 • தனியா பொடி – 1 1/2 தேக்கரண்டி
 • மிளகுப் பொடி – 1/2 தேக்கரண்டி
 • வெந்தையப் பொடி – ஒரு சிட்டிகை
 • இஞ்சி இடித்தது – அரை துண்டு
 • பூண்டு இடித்தது – 4 பற்கள்
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

நெத்திலி மீனை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

மேலே ஊற வைக்கக் குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
கலந்ததும் அதில் சுந்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் பிரட்டிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும், ஊற வைத்துள்ள மீன் துண்டுகளைப் போடவும்.

மீன் பொன்னிறமாக வறும் வரை வறுக்கவும். அப்போதுதான் மொறு மொறுவென இருக்கும். அவ்வளவுதான் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors