காரமான சிக்கன் ஊறுகாய் செய்முறை, chicken urukaai seimurai in tamil

தேவையான பொருட்கள்

  • எலும்புகள் இல்லா சிக்கன் – 1 கிலோ
  • மிளகாய் தூள் – 8 – 10 மேசைக்கரண்டி
  • உப்பு – 7 மேசைக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 1/2 கப்
  • கடுகுப் பொடி – 2 மேசைக் கரண்டி
  • சீரகம் மற்றும் வெந்தையப் பொடி – 1 மேசைக்கரண்டி
  • கரம் மசாலா பொடி – 1/2 மேசைக்கரண்டி
  • முழு பூண்டு – 1
  • கருவேப்பிலை – 5 இலைகள்
  • சீரகம் – 2 மேசைக் கரண்டி
  • கடுகு – 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் – 1/2 மேசைக்கரண்டி

செய்முறை

*சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு பொறித்துக் கொள்ளவும். சிக்கன் பொன்னிறமாக வரும் வரை பொறிக்க வேண்டும். சிக்கனைப் பொறித்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*மற்றொரு பாத்திரத்தில் 4 – 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு காய விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிந்து வரும் வரைக் காத்திருக்கவும். அடுத்ததாக உறித்த முழு பூண்டு பற்களை அதில் போட்டு வதக்கவும். அடுத்ததாக கருவேப்பிலை சேர்க்கவும்.

*பின் இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கியதும் மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும்.

*அடுத்ததாக சிறிய பாத்திரத்தில் மிளகாய்த் தூள், உப்பு, கடுகுப் பொடி, சீரகம் மற்றும் வெந்தயப் பொடி , கரம் மசாலா பொடி , எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்குக் கிளறவும்.

*தற்போது அந்தக் கலவையை எண்ணெய் கடாயில் போட்டு வதக்கவும். வதக்கும் போது அடுப்பை சிறுந்தீயில் வையுங்கள்.

*நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் பொறித்து வைத்துள்ள சிக்கன் வறுவலை அதில் சேர்த்து கலவை சிக்கனிற்குள் இறங்குமாறு வதக்கவும்.

*தற்போது சுவையான சிக்கன் ஊறுகாய் ரெடி. இதை எல்லா உணவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

Loading...
Categories: oorugai Recipes In Tamil

Leave a Reply


Sponsors