கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி, potato boli recipe in tamil

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 10
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
மைதா மாவு – 2 கப்
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லியிலை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது.

 

செய்முறை :

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்யை தனித்தனியா கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சை மிளகாய், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு வதக்கி அதனுடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள், பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.

மைதா மாவில் உப்புடன் சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு பிசைந்து கொள்வதுபோல் பிசைந்து கொள்ளவும்.

மாவில் இருந்து ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து அதனை தட்டி நடுவில் பூரணத்தை வைத்து மீண்டும் கைகளால் தட்டி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு போளி ரெடி

Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors