காலையில் குடிக்க சத்தான கம்பு ஜூஸ், morning health kambu juice recipe in tamil, tamil cooking tips

காலையில் காபி, டீ குடிப்பவர்கள் அதற்கு பதிலாக சத்தான புத்துணர்ச்சி தரும் கம்பு ஜூஸ் குடிக்கலாம். இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

காலையில் குடிக்க சத்தான கம்பு ஜூஸ்
தேவையான பொருட்கள் :

கம்பு – 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 50 கிராம்
தேங்காய் – 2 சில்செய்முறை :

* கம்பை ஊற வைத்து மறுநாள் முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

* முளைக்கட்டிய கம்புடன் வெல்லம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்.

* அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வடிக்கட்டிக்கொள்ளவும்.

* சுவையான கம்பு ஜூஸ் ரெடி.

* சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். விரும்பினால் அரைக்கும் போது ஒரு முந்திரிப்
பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கலாம்.

Loading...
Categories: juice receipe in tamil

Leave a Reply


Sponsors