காளான் – குடைமிளகாய் டிக்கா, mashroom – kudaimilakaai dikka seimurai in tamil, tamil receipies

இன்று காளான், குடைமிளகாய் வைத்து டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • காளான் – 10
  • குடைமிளகாய் – 2
  • பெரிய வெங்காயம் – 1
  • மிளகாய் – 2
  • பூண்டு – 5 பல்
  • மிளகு தூள் – அரை டீஸ்பூன்
  • சோம்பு  – சிறிதளவு
  • வெந்தயம் – அரை டீஸ்பூன்
  • கடுகு – சிறிதளவு
  • தனியா – சிறிதளவு

செய்முறை :

காளானை சுத்தம் செய்து வைக்கவும்.

குடைமிளாய், வெங்காயத்தை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.

பூண்டு, மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

சோம்பு, வெந்தயம், தனியா, கடுகு போன்றவற்றை வறுத்து பொடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வறுத்து பொடித்த கலவையை கொட்டி கிளறவும்.

பச்சை வாசனை போனதும் இறக்கி அதனுடன் குடை மிளகாய், காளான் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய காளான், குடை மிளகாயை டிக்கா குச்சியில் குத்தி எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறவும்.

சூப்பரான காளான் டிக்கா ரெடி.

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors