காளான் மசாலா தோசை செய்முறை!, mashroom masala thosai seimurai in Tamil, Tamil cooking tips

தேவையான பொருட்கள்

தோசை செய்ய

 • அரிசி – 1 1/2 கப்
 • கைகுத்தல் அரிசி சாதம் 1 1/2 கப்
 • கறுப்பு உளுந்து 3/4 கப்
 • வெந்தயம் 1/4 தேக்கரண்டி
 • உப்புத்தூள் தேவையான அளவு

காளான் மசாலா செய்ய

 • காளான் 1 பாக்கேட் ( பொடியாக நறுக்கியது)
 • வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)
 • தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
 • இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
 • வரமிளகாய் தூள் 1 1/2 தேக்கரண்டி
 • கொத்தமல்லி தூள் 3/4 தேக்கரண்டி
 • கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
 • கொத்தமல்லி இலைகள் 2 மேஜைக்கரண்டி
 • சோம்பு 1/4 தேக்கரண்டி
 • சமையல் மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 1. காட்டுயானம் அரிசி மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்து 5 மணிநேரம் ஊற வைக்கவும்.
 2. கறுப்பு உளுந்தையும் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
 3. கிரைண்டரில் காட்டுயானம் அரிசி , வெந்தயம், கைகுத்தல் அரிசி சாதம் மற்றும் கறுப்பு உளுந்தையும் சேர்த்து நன்றாக சிறிது உப்பு தூள் சேர்த்து அரைக்கவும்.
 4. இப்பொழுது வடைச்சட்டியில் சமையல் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போட்டு நன்றாக வதக்கவும்.
 5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாகபொன்னிறமாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
 6. பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூளை சேர்த்து நன்றாக இந்த கலவை கூழ் போல் ஆகும் வரை வதக்கவும்.
 7. பிறகு நன்றாக பொடியாக நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் கரம்மசாலா தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
 8. அதில் 3/4 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு மசாலா நன்றாக வெந்ததும் , அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
 9. தோசை மாவை கொண்டு தோசையை தோசை கல்லில் வார்த்து , அதன் மேல் ஒரு மேஜைக்கரண்டி சமையல் கடலெண்ணய் ஊற்றி தோசை வெந்ததும் அதில் காளான் மசாலாவை நடுவில் வைத்து. தோசையை மூடி , நன்கு மடித்து அதன் மேல் ஒரு தேக்கரண்டி பசு நெய் விட்டு நல்ல தோசை முறுகலானதும் எடுத்து பரிமாறவும்.
Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors