கிரிஸ்பி முட்டை போண்டா செய்முறை!, muddai bonda seimurai in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • முட்டை – 6 (வேக வைத்தது)
  • கடலை மாவு – 1 கப்
  • பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
  • பச்சரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  • முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.
  • ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  • அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி!!!
Loading...
Categories: Healthy Recipes In Tamil, Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors