கிறிஸ்மஸ் ஸ்பெஷல்: சுகர் குக்கீஸ் செய்முறை, Christmas sugar cookies recipe in tamil

தேவையான பொருட்கள்

  • பட்டர்- 8 மேசைக்கரண்டி
  • சீனி – 1 கப்
  • முட்டை – 1
  • வெண்ணிலா எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • கோதுமை மா 1 1/2
  • புட் கலரிங் – 1/2 தேக்கரண்டி
  • ஸ்பிரிங்ல்ஸ்( Sprinkles) (ரெட் ,வையிட்) – சிறிதளவு

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் பட்டர்,சீனி சேர்த்து பீட் செய்யவும்.

*பிறகு முட்டை வெண்ணிலா எசன்ஸ் ,உப்பு, சேர்த்து பீட் செய்து பின்பு
கோதுமை மா சேர்த்து பீட் செய்யவும்.

*பீட் செய்த மாவை இரண்டு பங்குகளாக பிரித்து ஒரு பங்கில் சிவப்பு நிற கலரிங் சேர்த்து பிசைந்து மாவை வட்டமாக உருட்டி கொள்ளவும் .

*மற்றொரு பங்கு மாவையும் வட்டமாக உருட்டி கொள்ளவும் .

*வட்டமாக உருட்டிய இரண்டு மாவையும் ஒன்றின் மீது ஒன்று வைத்து உருளையாக உருட்டி கொள்ளவும்.

*ஸ்பிரிங்ல்ஸ் (Sprinkles) எடுத்து உருட்டிய மாவில் தூவி பொலித்தீனால் (food wrapping polythene) சுற்றி குறைந்தது 4 மணித்தியாலங்கள் குளிர்ப்படுத்தி வைக்கவும்.

*குளிர்ப்படுத்திய மாவை எடுத்து 6 இன்ச் இடைவெளி விட்டு துண்டுகளாக வெட்டி அவன் பாத்திரத்தில் வைக்கவும்.

*375°F (190°C) வெப்பத்தில் 8-10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*சுவையான சுகர் குக்கீஸ் தயார்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, Samayal Tips Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors