குழந்தைகளுக்கான குளுகுளு சாக்லேட் புட்டிங், chocolate pudding for kids, receipe in tamil

குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான குளுகுளு சாக்லேட் புட்டிங்
தேவையான பொருட்கள் :

பால் – இரண்டரை கப்,
ஃப்ரெஷ் கிரீம் – முக்கால் கப்,
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – கால் கப்,
சர்க்கரை – 1/3 கப்,
கோகோ பவுடர் – கால் கப்,
சாக்லேட் சிப்ஸ் – 1/3 கப்,
வெனிலா எசன்ஸ் – ஒன்றரை டீஸ்பூன்,

அலங்கரிக்க : 

புதினா இலை, செர்ரி பழம், கோகோ பவுடர் – சிறிதளவு.

செய்முறை :

* ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், கிரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

* கலந்த கலவையை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

* இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.

* இந்த கலவை நன்றாக ஆறியவுடன் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

* புட்டிங் நன்றாக செட் ஆனவுடன் அதன் மேலே கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

* சாக்லேட் புட்டிங் ரெடி.

குறிப்பு: பெரிய கண்ணாடி பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனவுடன் ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.

Loading...
Categories: இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors