குழந்தைகளுக்கான கேரமல் கஸ்டர்டு புட்டிங், kulanthaikalukkana Caramel Custard Pudding, tamil receipe in tamil

கேரமல் கஸ்டர்டு புட்டிங் சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

குழந்தைகளுக்கான கேரமல் கஸ்டர்டு புட்டிங்
தேவையான பொருட்கள் :

  • பால் – 500 மிலி
  • முட்டை – 2
  • சீனி – 1 1/4 கப்
  • வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – 1 சிட்டிகை

செய்முறை :

* முட்டை நன்றாக அடித்து வைக்கவும்.

* பாலை நன்கு காய்ச்சி அதில் முக்கால் கப் சீனியைப் போட்டு நன்கு கரைந்ததும் ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

* அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து நன்கு அடித்து கலக்கவும்.

* மீதமுள்ள 1/2 கப் சீனியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். சீனி உருகி கோல்டன் ப்ரவுன் கலர் சிரப்பாக மாறும் வரை கரண்டியால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சீனி கேரமல் சிரப்பாக ஆனவுடன் அதனை பேக்கிங் ட்ரேயில் எல்லாப் பக்கமும் படுமாறு ஊற்றவும்.

* கேரமல் சிரப் கெட்டியானவுடன் கலந்து வைத்துள்ள பால் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்ய வேண்டும்.

* இல்லையெனில் ட்ரேயை அலுமினிய foil – ஆல் மூடி ஆவியில் வேக வைக்கவும். மூடவில்லையென்றால் தண்ணீர் புட்டிங்கிற்குள் போய் விடும்.

* நன்றாக வெந்தவுடன் புட்டிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* பரிமாறுகையில் புட்டிங்கை கவிழ்த்துப் பரிமாறவும்.

* புட்டிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாக பரவியிருக்கும்.

* கேரமல் கஸ்டர்டு புட்டிங் ரெடி.

Loading...
Categories: kulanthai unavugal in tamil, இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors