குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு, kulanthaikalukkana saththana laddu, receipe in tamil

குழந்தைகளுக்கு சத்தானது இந்த பொட்டுக்கடலை லட்டு. இந்த லட்டை எப்படி எளிய முறையில் செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு
தேவையான பொருள்கள் :

பொட்டுக்கடலை – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
நெய் – 3 மேஜைக்கரண்டி
மிதமான வெந்நீர் – 50 அல்லது 75 ml

செய்முறை :

* பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை துருவி கொள்ளவும்.

* இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.

* பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

* எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.

* சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.

* இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.

Loading...
Categories: kulanthai unavugal in tamil

Leave a Reply


Sponsors