குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ், chicken Fride rice for kids, tamil samayal kurippu, in tamil language

தேவையான பொருட்கள்:

 • பாஸ்மதி ரைஸ் – 1/2 கிலோ
 • சிக்கன் – 1/2 கிலோ
 • வெங்காயம் – 2
 • வெங்காயத் தாள் – 4 பொடியாக நறுக்கியது
 • மிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன்
 • கறிமாசாலா – 1 ஸ்பூன்
 • தக்காளி விழுது – 1 ஸ்பூன்
 • சீரக தூள், சர்க்கரை – 1/2 ஸ்பூன்
 • அஜினோமோட்டோ – சிறிதளவு
 • மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – தேவையான அளவு
 • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
 • இஞ்சி, பூண்டு விழுது – தேவையான அளவு

 

செய்முறை:

* பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும்.

* சிக்கனை சிக்கன் 65 செய்வது போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

* மிளகாய் விழுது தயார் செய்ய அவற்றை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சிறிது வினிகர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும். பின்னர் உப்பு, சர்க்கரை, அஜினோமோட்டோ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேலும் சிக்கன் பொடியாக நறுக்கியதை சேர்க்கவும்.

* கடைசியாக சாதம், மிளகுத் தூள், தக்காளி சாஸ், சீரகத் தூள், கறிமசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக கொத்தமல்லி, வெங்காயத் தாளை தூவி இறக்கவும்.

Loading...
Categories: Rice Recipes In Tamil, Samayal Tips Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors