குழந்தைகள் விரும்பி உண்ணும் பாஜ்ரா கிச்சடி!, kulanthaikalukku pajar kichchadi recipe in tamil

தேவையானப்பொருட்கள்:

கம்பு – ஒரு கப்,
பச்சைப் பயறு – அரை கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
லவங்கம் – 2,
துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

சுத்தம் செய்த கம்பு, பச்சைப் பயறு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்க ரில் வைத்து குழைய வேகவிடவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, சீரகம், லவங்கம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து, வேகவைத்த கம்பு – பச்சைப் பயறு கலவையில் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

Loading...
Categories: kulanthai unavugal in tamil

Leave a Reply


Sponsors