குழந்தைகள் விரும்பும் சுவையான ப்ரூட் ஜெலி கேக் செய்முறை, fruit jelly cake recipe in Tamil, Tamil cooking tips

தேவையான பொருட்கள்

முதலாவது அடுக்கு

 • தண்ணீர் – 1 கப்
 • ஜெலட்டீன் – 1 தேக்கரண்டி
 • பைனப்பல் சிரப் – 4 மேசைக்கரண்டி
 • அரைத்த சீனி – 3 மேசைக்கரண்டி
 • மாதுளம்பழம் – தேவையான அளவு
 • கிவிப்பழம் – தேவையான அளவு
 • மாம்பழம் – தேவையான அளவு
 • அன்னாசி – தேவையான அளவு

இரண்டாவது அடுக்கு

 • தேங்காய்ப்பால் – 1/2 பகட்
 • தண்ணீர் – 1/2 கப்
 • ஜெலட்டீன் – 3/4 தேக்கரண்டி
 • அரைத்த சீனி – 3 மேசைக்கரண்டி

மூன்றாவது அடுக்கு

 • ஒரன்ச் கிரஸ்ட் – 2 மேசைக்கரண்டி
 • தண்ணீர் – 1/4 கப்
 • ஜெலட்டீன் – 3/4 தேக்கரண்டி
 • அரைத்த சீனி – 3 மேசைக்கரண்டி

செய்முறை

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர்,ஜெலட்டீன் சேர்த்து நன்கு கலந்து, ஒரு நிமிடம் வைத்து பைனப்ள் சிரப் சீனி, சேர்த்து இறக்கவும்.

சதுர வடிவ பாத்திரம் ஒன்றில் செய்த கலவைவை ஊற்றவும். பின்பு அதில் மாதுளம்பழம், கிவிப்பழம், மாம்பழம், அன்னாசிபழம், சேர்த்து குளிரூட்டியில் வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் பால்,தண்ணீர் ஜெலட்டீன், சேர்த்து நன்கு கலக்கவும், பிறகு சீனி சேர்த்து குளிரூட்டியில் வைத்த கலவை மீது ஊற்றி மீண்டும் குளிரூட்டியில் வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் ஒரன்ச் கிரஸ்,தண்ணீர், ஜெலட்டீன்,சீனி,சேர்த்து நன்கு கலக்கிய பின் குளிரூட்டியில் வைத்த கலவை மீது ஊற்றி மீண்டும் குளிரூட்டவும்.

நன்கு குளிரூட்டிய பின் ஒரு தட்டில் போட்டு சதுர வடிவங்களாக வெட்டி பரிமாறவும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, kulanthai unavugal in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors