குழிபணியாரம், kuli paniyaram recipe in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி 1/2 கப்
அவல் 1/2 கப்
உளுந்து 1/4 கப்
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு

தாளிக்க
சின்ன வெங்காயம் 20 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்ல கொஞ்சமாக
வர மிளகாய் 6 ( தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்)
பூண்டு பற்கள் 4
தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
உளுந்து பருப்பு 1 மேஜைக்கரண்டி
கடலைபருப்பு 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
மரசெக்கு கடலெண்ணய் தேவையானஅளவு

செய்முறை

1. தண்ணீரில் ஊற வைத்துள்ள வரமிளகாயை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மையமாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

2. பூண்டையும் வரமிளகாய் அரைப்பில் சேர்த்துகோங்க நன்றாக விழுதாக நைசாக மையாக அரைத்து சேர்த்து கொள்ளவும்.

3. இப்பொழுது அரிசியை நன்றாக சுத்தமாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும். உளுந்து மற்றும் வெந்தயம் இவ்விரண்டையும் நன்றாக கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.

4. அவலை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்.

5. இப்பொழுது ஊறவைத்தள்ள இந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மையமாக விழுதாக நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

6. அரைத்து வைத்துள்ள மாவு கலவையில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க குறைந்தபட்சம் 10 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். ஏறக்குறைய மாவின் அளவு இரண்டு பங்கு உயர்ந்து இருக்கும்.

7. இப்பொழுது பணியாரம் செய்ய மாவு தயார் நிலை ஆனால் இந்த சமயத்துல செய்ய விரும்பாத நேரத்துல பிரிஜ்ல வைத்து கொள்ள வேண்டும்.

8. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, கடலை பருப்பு மற்றும் உளுந்து சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வறுத்து அதை பணியார மாவு கல்லில் சேர்த்துகோங்க.

9. வடச்சட்டியில் ஒரு மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் , வரமிளகாய் மற்றும் பூண்டு அரவை கொஞ்சமாக கறிவேப்பில்ல, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வந்ததும் , அதில் உங்கள் வசதிகேற்ப பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்துகோங்க நன்றாக வேகவைத்து தண்ணீர் விடாமல் வதக்கி சேர்த்துகோங்க.

10. இப்பொழுது துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்துகோங்க நன்றாக கிளறி கொள்ள வேண்டும். நன்றாக முற்றிய தேங்காயை மட்டுமே சேர்த்துகோங்க.

11. இப்பொழுது மண் குழிபணியார சட்டி அல்லது மாவுகல்லால் செய்யப்பட்ட பணியார கல் அல்லது இரும்பு குழிபணியார சட்டி இவைகளை பயன்படுத்தினால் மட்டுமே சுவை இரட்டிபாகும் , பணியாரம் முறுகலாக கிடைக்கும்.

12. கடலை பருப்பு ஒரு மேஜைக்கரண்டி இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து மாவில் சேர்த்துகோங்க அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துகோங்க.

13. இப்பொழுது மேலே குறிப்பிட்டுள்ள யாதெனும் ஒரு வகை பணியார கல்லை மேலே வைத்து விட வேண்டும். அது நன்றாக சூடானதும் ஒரு துணியை மரசெக்கு கடலெண்ணய்ல தொய்த்து அனைத்து பணியாரக் கல் துவாரங்களிலும் துடைத்து ஒரு தேக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கலக்கி வைத்துள்ள குழிபணியார மாவை பணியார கல்லில் உள்ள துவாரங்களில் ஊற்றவும்.

14. நன்றாக ஒரு புறம் வெந்ததும் ஒரு ஸ்பூனை கொண்டு திருப்பி போட்டு மறுபடியும் தேவையான அளவிலான மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க.

15. நன்றாக முறுகலாக பொன்னிறமாக ஆனதும் எடுத்து சுடச்சுட தேங்காய் மற்றும் காரசட்னியுடன் பரிமாறவும்.

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors