கேக் லாலிபாப், cake lolly pop receipe in tamil, tamil cooking tips

தேவையானவை:
வெனிலா ஸ்பான்ச் கேக் – கால் கிலோ (கேக்கின் ஃபிளேவர் உங்கள் விருப்பப்படி)
டார்க் சாக்லேட் – ஒரு பார்
வொயிட் சாக்லேட் – ஒரு பார்
மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் – 2 டேபிள்ஸ்பூன்
லாலிபாப் ஸ்டிக் அல்லது டூத்பிக் – தேவையான அளவு
அலங்கரிக்க சாக்கோ சிப்ஸ் – 1 டேபிள்ஸ்பூன் (சீரக மிட்டாய், பேப்பர் மிட்டாய் போன்றவற்றைக் கூட உபயோகிக்கலாம்)

செய்முறை:
பெரிய பாத்திரத்தில் கேக்கை தூளாக்கிப் போட்டு, இதில் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.

இனி லாலிபாப் ஸ்டிக்கில் மாவை விரும்பிய சைஸில் உருண்டையாகப் பிடித்து, அரை மணி நேரத்துக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் டார்க் சாக்லேட்டை உடைத்துப் போடவும். இந்தப் பாத்திரத்தைக் கொதிக்கும் தண்ணீரில் வைத்து, சாக்லேட்டை உருக வைக்கவும்.

இன்னொரு பவுலில் வொயிட் நிற சாக்லேட்டை மேற்கூறிய முறைப்படி உருக்கி வைக்கவும். இனி லாலிபாப்பை, உருக்கிய டார்க் சாக்லேட்டில் முக்கியெடுத்து அலங்கரிக்கக் கொடுத்தவற்றில் புரட்டி எடுக்கவும்.

மற்றொரு லாலிபாப்பை உருக்கிய வொயிட் சாக்லேட் கலவையில் முக்கியெடுத்து அலங்கரிக்கக் கொடுத்தவற்றில் புரட்டி எடுக்கவும்.

இப்படி எல்லாவற்றையும் செய்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors