கேரட் கேக் , Whole Wheat Carrot Cake receipe in tamil, tamil samayal kurippu

தேவையானவை

ஹோல்வீட் ப்ஃளவர் (Whole Wheat) – 2 கப்
துருவிய கேரட் – 2 (2 கப்)
ப்ரெளன் சுகர் – 3/4 கப்
பால் – 1/4 கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3/4 கப்
முட்டை – 2
ஜாதிக்காய் பொடி (nutmeg) – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
பட்டை பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி

 

ப்ராஸ்ட்டிங் செய்ய

வெண்ணெய் – 1/2 கப் (ரூம் டெம்ப்பரேச்சர்)
ஐசிங்சுகர் (பவுடர் சுகர்) – 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
கோகோனட் பவுடர் – 2 தேக்கரண்டி

செய்முறை

மாவுடன் பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,ஜாதிக்காய் பொடி,பட்டை பொடி,உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ப்ரெளன் சுகர்,முட்டை,எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பின் பால் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும்.

அந்த கலவையில் சலித்து வைத்திருக்கும் மாவு சேர்த்து அடிக்கவும்.

பின்பு துருவிய கேரட்டை சேர்க்கவும்.

பின் கரண்டியால் மென்மையாக கலக்கவும்.

ஓவனை 350 டிகிரி F முற்சூடு செய்யவும்.ஒரு பட்டர் தடவிய பேக்கிங் ட்ரேயில் கேரட் கலவையை அதில் ஊற்றி 350 டிகிரி F 40 நிமிடம் பேக் செய்யவும்.

இடையில் டூத்பிக்கில் குத்திபார்த்தால் மாவு ஒட்டாமல்வரும் அதுதான் பதம் எடுத்து ஆறவிடவும்.

இதனை கட் செய்து அப்படியே சாப்பிடளாம்.விரும்பினால் ஃப்ராஸ்ட்டிங்கும் செய்தும் சாப்பிடளாம்.

ஒரு பாத்திரத்தில் ரூம் டெம்ப்பரேச்சரில் உள்ள வெண்ணெய், பவுடர்ட் சுகர்,வென்னிலா எசன்ஸ்,கோகோனட் பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.

கேக் நன்கு ஆறிய பின் கேக்கின் மேல் இந்த க்ரீமை பூசவும்.

பின்னர் கேக்கை விரும்பியவாறு அலங்கரித்து கட் செய்து கொள்ளவும்

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors