கேரட் பர்பி செய்முறை!, carrot parbi seimurai in tamil, tamil cooking tips

  • கேரட் துருவல் – 2 கப்
  • தேங்காய்த் துருவல் – 2 கப்
  • பால் – 2 கப்
  • சீனி – 2 கப்
  • நெய் – ஒரு கப்
  • முந்திரிப்பருப்பு – 10

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு சூடானதும் அதில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதில் துருவிய கேரட்டை போட்டு ஒரு முறை கிளறி விட்டு ஒரு கப் பாலை ஊற்றி கேரட்டை வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

பால் வற்றி வரும் பொழுது தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து மேலும் ஒரு கப் பாலை ஊற்றி கேரட் துருவலுடன் தேங்காய் சேர்ந்து வெந்து பால் வற்றி வரும் வரை கிளறவும்.

பால் வற்றியதும் 2 கப் சீனி சேர்த்து கிளறி விடவும்.

இடையிடையே நெய் ஊற்றி அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கேரட், தேங்காய் துருவல் மற்றும் சீனி எல்லாம் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி அதில் கேரட் கலவையை கொட்டி வில்லைகள் போட்டு அதன் மேல் வறுத்த முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.

ஆறிய பிறகு ஒரு கத்தியினால் வில்லைகளை தனித்தனியே பிரித்து துண்டுகளாக எடுத்து பரிமாறலாம். சுவையான கேரட் பர்பி தயார்.

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors