கேரட் போண்டா, carrot Bonda receipe in tamil language

இதுவரை கேரட்டைக் கொண்டு ஜூஸ் தான் செய்து குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு போண்டா செய்து சுவைத்ததுண்டா? ஆம், கேரட்டைக் கொண்டு அருமையான சுவையில் போண்டா செய்யலாம். இது மாலை வேளையில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ்.

சரி, இப்போது அந்த கேரட் போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்ததென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேரட் – 1 (பெரியது மற்றும் துருவியது)
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – 1 கப்
பேக்கிங் சோடா – 2 t ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் உலர் திராட்சையை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, அத்துடன் உலர் திராட்சையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியான பதத்தில் கலந்து கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கேரட் போண்டா ரெடி!!!

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors