கொத்து ரொட்டி, srilanka recipe in tamil, tamil samayal kurippukal

கொத்து ரொட்டி செய்யத் தேவையானவை

  • இறைச்சி கறி (கோழி, ஆடு அல்லது மாடு) – அரை கப்
  • முட்டை – 1
  • வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி – 2
  • லீக்ஸ் (பச்சை இலை) – கைப்பிடியளவு
  • கோவா – கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக
  • சிறிய தக்காளி – 1
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 5
  • கறிவேப்பிலை – ஒரு இணுங்கு

(கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு அரியலாம். ஆனால் கவனமாக வெட்ட வேண்டும். கூட நேரம் விட்டால் தூளாக்கி விடும்.செய்முறை

ஒரு தவாவை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும். எண்ணை சூடாகியபின் தக்காளி துண்டங்களை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின் பச்சை மிளகாயை / லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி
3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும். இல்லாவிட்டால் பச்சை முட்டை வாசனை வரும்.

Loading...
Categories: Samayal Tips Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors