கோடைக்கால கண் பராமரிப்புக்கு எளிய வழிகள்!…, Summer Time Eye care beuty, tamil tips. beauty tips in tamil

கோடை என்றதும் நம் அனைவரின் மனதிலும் ஒரு பயம் கலந்த கவலைதொற்றிக்கொள்கிறது காரணம் வெப்பத்தின் தாக்கமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் ஆகும்.

நாம் நமது உடைகள், உணவுப் பழக்கங்கள் என நம் வாழ்க்கை முறையை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கிறோம். கோடையினால் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் கண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்து அதிகம் உறிஞ்சப்படுகிறது.

இதனால் எரிச்சல், அரிப்பு போன்றவையும், கண்களில் வீக்கமும் தோன்றுவதால் அதிக சிரமம் ஏற்படும். கணினியில் பணிபுரிபவர்களுக்கு கண் பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் கோடையில் அந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கும். எனவே கண்களை பராமரிக்க மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

1.உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனை கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். வேண்டுமெனில், உருளைக்கிழங்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து கூட உபயோகிக்கலாம். இந்த முறையால் கருவளையம் இருந்தாலும் போய்விடும்.

2.வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை வட்டமாக வெட்டி, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண் எரிச்சல் குணமாவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருவளையமும் நீங்கும். மேலும் இதில் உள்ள குளிர்ச்சி தன்மையால் கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3.கற்றாழை ஜெல்

ஆம், கற்றாழையின் ஜெல்லும் கண் எரிச்சலைப் போக்கக்கூடிய ஒரு பொருள் தான். அதற்கு கற்றாழையை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை காட்டனில் நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும்.

4.டீ பேக்

டீ பேக் கண் எரிச்சலைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்களில் ஒன்று தான் டீ பேக்குகளை கண்களில் வைப்பது. அதாவது, 2 டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை கண்களின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், கண் எரிச்சல் நீங்குவதோடு, கண்களும் அழகாக இருக்கும்.

5.குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர் கண்கள் எரிச்சலுடன் இருந்தால், அப்போது குளிர்ந்த நீரில் கண்களை அலசினால், கண்களில் எரிச்சலை உண்டாக்கும் தூசிகள் நீங்கி, எரிச்சல் குணமாகும். குறிப்பாக, இவ்வாறு செய்யும் போது, கைகளை முதலில் நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அழுக்கான கையால் கண்களை எப்போதும் தொடக்கூடாது.

Loading...
Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors