கோடைக்கு ஏற்ற கீரைகள்!, keerai unavukal for summer times tips in tamil

வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. ஆகவே, நாம் உண்ணும் உணவுகள் வெயிலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கும் விதமாக பார்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, அன்றாடம் நாம் உணவுகளில் கீரைகளை சேர்த்துக்கொண்டாலே போதும். பசலைக்கீரையை பருப்புடன் சேர்த்தோ தனியாகவோ கடைந்து சாப்பிட்டு வந்தால். நீர் எரிச்சல், நீர்க்கட்டு, உடல்சூடு போன்றவை சரியாகும். அதுமட்டுமல்லாமல், வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் கோளாறை பசலைக்கீரை சரிசெய்வதோடு சொறி, சிரங்கையும் குணப்படுத்தும்.

வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால், நீர் எரிச்சல் குணமாகும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும்.

மணத்தக்காளிக்கீரையை வாரம் 2 நாள் வீதம் பருப்புடன் சேர்த்து கடைந்தோ, தனியாகவோ அல்லது சூப், ஜூஸ் ஆகவோ சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய்கள். வாய்வுக்கோளாறு, குடல்புண், மூத்திர எரிச்சல் போன்றவை சரியாகும். முன்கூட்டியே சாப்பிட்டால், மேற்சொன்ன கோளாறுகள் வருவதில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.

இதேபோல் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் தணியும். அத்துடன், கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளும் சரியாகும்.

சிறுகீரையை பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால். பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors