சத்தான சுவையான பீட்ரூட் பிரியாணி சாப்பிட ஆசையா?, beetroot briyani receipe in tamil, tamil samayal kurippukal

உங்கள் உடலை வலுவாக்கி, சருமத்தை பொலிவாக்கும். பீட்ரூட் பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெசிபி. பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உங்கள் உடலை வலுவாக்கி, சருமத்தை பொலிவாக்கும். பீட்ரூட் பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை:

பீட்ரூட் – ஒன்று, அரிசி – ஒரு கப், கொத்தமல்லி இலை, புதினா இலை (சேர்த்து) – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு இஞ்ச் நீளத் துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 3, நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும். பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும். அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.

இலைகள் வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட்டு எடுத்தால் சுவையான பீட்ரூட் பிரியாணி தயார்!!

இந்தப் பிரியாணியின் கலர் வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்; சுவையும் பிரமாதமாக இருக்கும். 

Loading...
Categories: Biryani Recipes Tamil, Saiva samyal, Samayal Tips Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors