சத்தான தயிர் சாண்ட்விச் செய்முறை, thajir sandvich seimurai in tamil

தேவையான பொருட்கள்
ரொட்டி துண்டுகள் – 4
கெட்டி தயிர் – 1/2 கப்
துருவிய கேரட் – 1/2 கப்
குடமிளகாய் – 1/4 கப்
முட்டைக்கோஸ் – 1/4 கப்
மல்லி தழை – 3 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – ருசிக்கு
வெண்ணெய் – தேவைக்கு
புதினா சட்னி – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை
வாணலியை சூடாக்கி, சிறிது நெய் விட்டு, ரொட்டித் துண்டுகளை, ஒரு பக்கம் மட்டும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.
தயிரில், கேரட், குடமிளகாய், முட்டைக்கோஸ், உப்பு, சாட் மசாலா சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும்.

டோஸ்ட் செய்த பக்கத்தில், புதினா சட்னி தடவி, அதன் மேல் தயிர் கலவையை பரப்பு, இன்னொரு ரொட்டியின் டோஸ்ட் செய்த பக்கத்தை மேலே வைத்து மூடி, வெண்ணெய் தடவிய வாணலியில், இரண்டு பக்கமும் சிவக்க டோஸ்ட் செய்து, சாப்பிடவும்

Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors