சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை, healthy vegitable vadai recipe in tamil, tamil samayal kurippu

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து சத்தான வடை செய்து கொடுக்கலாம். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை
தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
கேரட் துருவல் – ஒரு கப்
கோஸ் பொடியாக நறுக்கியது – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
புதினா – சிறிதளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவுசெய்முறை :

* உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, கேரட் துருவல், கோஸ், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான காய்கறி வடை ரெடி.

குறிப்பு:

நாம் விரும்பும் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வடை செய்யலாம். இந்த வடைக்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Loading...
Categories: Healthy Recipes In Tamil, Vadai Recipe In tamil

Leave a Reply


Sponsors