சத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu

சிவப்பு அரிசி, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசி, கேழ்வரகை வைத்து சத்து நிறைந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம்
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி மாவு – கால் கிலோ
கேழ்வரகு மாவு – கால் கிலோ
உப்பு – சிறிதளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் சேர்த்து கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, இலகுவான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும்.

* குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ பிழிந்த இடியாப்பத்தை வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

* சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.

Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors