சத்து நிறைந்த பாசிப்பயிறு கட்லெட், paasipayaru kadlad seimurai in tamil, tamil samayal kurippu

பாசிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக திகழ்கிறது. இதனை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதனை கட்லெட்டாக செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பாசிப்பயிறு – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 1
மிளகு பொடி – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முளைகட்டிய பாசிப்பயிறை மிக்சியில் போட்டு கொரகொர வென்று அரைத்து கொள்ளவும்.

அரைத்த பாசிப்பயிறில் வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைத்த மாவை உருண்டையாக செய்து வட்டமாக கட்லட் வடிவில் தட்டி வைக்கவும். அதை பச்சையாகவே சாப்பிடலாம்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான பாசிப்பயிறு கட்லெட் ரெடி.
Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors