சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட சோயா கைமா ரெடி….., soya kaima recipe in tamil, samayal kurippu in tamil

தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்,
எண்ணெய் – சிறிது,
சோயா – 100 கிராம்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப),
கரம் மசாலாத் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

அரைக்க…

வெங்காயம் – பாதி,
பூண்டு – 4 பல்,
கறிவேப்பிலை இலை – 5,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3.


செய்முறை :

சோயாவை கழுவி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்துடன், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அத்துடன் தூள் வகைகள் சேர்த்து கிளறி விடவும்.

அதில் அரைத்த சோயா சேர்த்து நன்றாக கலந்து 4 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். இது நன்றாக வெந்து முட்டை பொடிமாஸ் மாதிரி இருக்கும்.

இப்போது சோயா கைமா ரெடி.

அத்துடன் சிறிது எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ளவும்.

சப்பாத்திக்கு மாவு பிசைந்து, சிறிய சமபந்துகளில் மாவை பிரித்து அதை சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் கைமா கலவை வைத்து மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லை சூடாக்கி இரண்டு பக்கங்களிலும் திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் பரிமாறவும்.

Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors