சம்பா கோதுமை ரவை கேரட் இட்லி, Samba Kothumai Idly recipe in tamil, tamil samayal kurippu

சம்பா கோதுமை ரவை கேரட் இட்லி

தேவையான பொருட்கள்

சம்பா கோதுமை ரவை – 1/2 கப்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1/4 டீஸ்பூன்,
தயிர் – 4 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
பச்சைமிளகாய் – 1,
கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
ஈனோ சால்ட் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

சம்பா கோதுமை ரவையை சூடான கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் கொத்தமல்லியை போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

சம்பா ரவையை தாளித்த கலவையில் சேர்த்து நன்கு ஆறியதும் தயிர், மஞ்சள் தூள், கேரட் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

உடனே ஈனோ சால்ட் சேர்த்து நன்கு கலக்கி இட்லியாக ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்து பரிமாறவும். ஈனோ சால்ட் சேர்த்தவுடன் மாவை உடனே இட்லியாக ஊற்ற வேண்டும்.

சுவையான சத்தான சம்பா கோதுமை ரவை கேரட் இட்லி ரெடி.
Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors