சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக், Chocolate sponge cake recipe in Tamil, Tamil samayal kurippu

என்னென்ன தேவை?

மைதா – 1/2 கப்,
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்,
புளித்த தயிர் – 2 டேபிள் ஸ்பூன்,
கொக்கோ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை – 1/2 கப் (பொடி செய்தது),
வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1/4 கப் (உருக வைத்தது),
தண்ணீர் – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

முதலில் பேக்கிங் சோடாவை, புளித்த தயிரில் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மைதாவில் கொக்கோ பவுடரை போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 1 நிமிடம் சூடேற்றி இறக்க வேண்டும். பிறகு அதில் சர்க்கரை மற்றும் உருக்கி வைத்துள்ள வெண்ணெய் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் மைதா கலவை, தயிர் கலவை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை மெதுவாக சேர்த்து மென்மையாக கிளறி விட வேண்டும். இறுதியில் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, பின் கிளறி வைத்துள்ள மாவை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 4 நிமிடம் பேக் செய்து இறக்கி, 10 நிமிடம் கழித்து பரிமாறினால்,

சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் ரெடி!!!

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors