சில்லி சீஸ் டோஸ்ட், Chili Cheese Toast recipe in tamil, tamil cooking tips

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமையலின் மூலம் பசியை அடக்க நினைத்தால், சில்லி சீஸ் டோஸ்ட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

சரி, இப்போது அந்த சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பிரட் – 2 துண்டுகள்

சீஸ் – 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், துருவிய சீஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்தின் மேல் அந்த கலவையை பரப்பி, மீண்டும் தோசைக்கல்லில் வைத்து சீஸ் உருகும் வரை வேக விடவும்.

இப்போது சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி!!!

Loading...
Categories: kulanthai unavugal in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors