சீஸ் கேக் பொப்ஸ் செய்முறை!, cheese cake pops seimurai in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • கிறீம் கிரக்கர் பிஸ்கட் – 10
  • பட்டர்- 1/2 கப்
  • கிறீம் சீஸ் – 455 கிராம்
  • பௌடர் சுகர் – 1/2 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி
  • மாஸ்மேலோ – 3 கப்
  • உருகிய சொக்லட் – 115 கிராம்
  • வைட் சொக்லட் – 455 கிராம்

செய்முறை

பாத்திரம் ஒன்றில் கிறீம் கிரக்கர் பிஸ்கட்டை துகள்களாக்கி கொள்ளவும்.

தூளாக்கிய பிஸ்கட்டில் உருகிய பட்டரை ஊற்றி கிளறி கொள்ளவும்.

பின்பு சதுர வடிவ பாத்திரத்தில் ஒயில் பேப்பர் போட்டு கலவையை கொட்டிக்கொள்ளவும்.

பாத்திரம் ஒன்றில் கிறீம் சீஸ் ,பௌடர் சுகர்,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலவை செய்யவும்.

மாஸ்மெலோவை அவனில் வைத்து உருக்கி சீஸ் கலவையில் சேர்த்து கிளறி கொள்ளவும்.

பின்பு பிஸ்கட் கலவையின் மீது சீஸ்கலவையை போட்டு குளிர்சாதன பெட்டியில் 1 மணித்தியாலங்கள் வைக்கவும்.

பிறகு கலவையை குளிசாதன பெட்டியில் இருந்து எடுத்து சதுர வடிவங்களில் வெட்டி சிறிய குச்சிகளை குத்தி கொள்ளவும்.

சொக்லட் கலவையில் வெட்டிய துண்டுகளை தோய்த்து பரிமாறவும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, Samayal Tips Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors