சுவீட் மாம்பழ லட்டு செய்முறை, sweet mango laddu recipe in tamil

தேவையான பொருட்கள்

மாம்பழ கூழ்: 1/2 கப்

சுண்டக் காய்ச்சிய பால்: 1/2 கப்

தேங்காய் பவுடர்: 1 கப்

ஏலக்காய் பொடி: 1/4 டீஸ்பூன்

நட்ஸ்: 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் தேங்காய் பவுடரை போட்டு, பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
  2. அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. இதில் நட்ஸைச் சேர்த்து, நல்ல பதத்தில் (அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன்) அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
  5. இறக்கி வைத்த கலவை ஆறிய பின் சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள்.
  6. ஒரு தட்டில் தேங்காய் பவுடரை தூவி, அதன் மீது உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு தயார்.
Loading...
Categories: Samayal Tips Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors