சுவையான அவல் உப்புமா செய்முறை, tasty aval upuma in tamil, tamil cooking tips

அவலில் நார்ச்சத்து அதிகம். எளிதில் ஜீரணமாகக்கூடியது. முதியவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது. பொதுவாக, மதிய நேரத்துக்குப் பிறகு சிலருக்கு ஏற்படும் சுறுசுறுப்பின்மை, மந்தத் தன்மையைப் போக்கும்.

தேவையான பொருட்கள்

  • அவல் – 150 கிராம் (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை

அவலை, தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டவும். வெங்காயத்தைப் பொடியாகவும், காய்ந்த மிளகாயை இரண்டாகவும் நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளிக்கவும்.

பிறகு வடிகட்டிய அவலைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

இதனுடன் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். அவலை நன்கு புரட்டி, உதிரியாக்கி சுவைக்கவும்.

Loading...
Categories: Healthy Recipes In Tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors