சுவையான அவல் உப்புமா!, tasty aval upuma recipe in tamil

தேவையானவை:

அவல்– 500 கிராம்,

கடுகு – 30 கிராம்,

கடலைப்பருப்பு – 50 கிராம்,

முந்திரிப் பருப்பு – 50 கிராம்,

எண்ணெய் -150 மி.லி, தண்ணீர் – 650 மி.லி,

வெங்காயம் – 250 கிராம்,

காலிஃப்ளவர் – 150 கிராம்,

பச்சை பட்டாணி – 50கிராம்,

கேரட் – 200 கிராம்,

பீன்ஸ் -100 கிராம்,

பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – தலா 25 கிராம்,

கறிவேப்பிலை -15 கிராம்,

பொடியாக நறுக்கிய இஞ்சி -20 கிராம்.

செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,
கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, காய்கறிகளை நறுக்கிச்
சேர்த்துக் கிளறவும்.

கடைசியில் அவல் மற்றும் தண்ணீர் சேர்த்து, கொதிக்கவைக்கவும்.

சில நிமிடங்களுக்கு பிறகு கொத்த மல்லித்தழை தூவி,
சூடாகப் பரிமாறவும்.

பலன்கள்:

அவலில் மாவுச்சத்துடன், இரும்புச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிகளவு
இருக்கின்றன. நிறைய காய்கறிகளும் சேர்த்து உப்புமாவாக சாப்பிடுவது
சத்தினைக் கொடுக்கும்.  குறிப்பாக இதய நோயாளிகள் அவல் உப்புமா சாப்பிடுவது
நல்லது.

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors