சுவையான ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு, tasty aaddu curry thokku recipe in tamil

தேவையான பொரு‌ட்க‌ள்

பூண்டு – 20 பல்
இஞ்சி – 50 கி
காய்ந்த மிளகாய்-10
பட்டை-2
கொத்தமல்லி இவை அனைத்தையும் ந‌ன்கு அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பொட்டுக்கடலை-1/2 கப்
துருவிய தேங்காய்-1 கப்

இவை அனைத்தையும் சேர்த்து த‌னியாக அரைக்கவும்

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பட்டை இலவங்கம் தாளித்து, வெங்காயம் சேர்க்கவும். பின் வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளியைச் சேர்க்கவும். நன்றாக வதக்கி பின் மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது உப்புப் போட்டு, மஞ்சள் பொடி சேர்த்து அரைத்த மசாலா விழுதைச் சேர்க்கவும். மேலும் தண்ணீர் விட்டு ந‌ன்றாக வேக ‌விடவு‌ம்.

கடைசியில் தேங்காய் பொட்டுக்கடலை ‌விழுதை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தி, பரோட்டா அனைத்துக்கும் பொருந்தும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors