சுவையான கொழுக்கட்டை செய்யும் முறை, tasty kolukaddai recipe in tamil

கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்: –

துருவிய வெல்லம் – 1 கப்

துருவிய தேங்காய் – 2 கப்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

இடியாப்ப மாவு – 1 கப்

உப்பு – சிறிதளவு

கொழுக்கட்டை செய்முறை:

ஒரு கடாயில் நெய் ஊற்றி நெய் உருகியதும் துருவிய தேங்காவினை சேர்த்து ஒரு நிமிடம் வரை மிதமாக வறுக்கவும்.

பிறகு அதனுடன் நாம் வைத்துள்ள துருவிய வெல்லத்தினை சேர்க்கவும். வெல்லத்தினை சேர்த்து வெல்லம் நன்றாக கரையும் வரை கிண்டவும்.

வெல்லம் கரைந்ததும் அதில் சிறிதளவு ஏலக்காய் பொடியினை சேர்க்கவும். இப்போது கொழுக்கட்டைக்கு தேவையான பூர்ணம் தயார் .

இதனை தனியாக எடுத்து வைத்த பிறகு, ஒரு பவுலில் இடியாப்ப மாவு போட்டு அதில் நன்றாக கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து கூடவே நெய் மற்றும் உப்பு சேர்த்து மாவினை கலந்து தயார் செய்து கொள்ளவும்.

பிறகு தயார் செய்த மாவினை கொழுக்கட்டை எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் வைத்து அதனுடன் தயார் செய்த பூரணத்தை வைத்து கொழுக்கட்டையினை மூடி அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான கொழுக்கட்டை தயார்.

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors