சுவையான சிக்கன் சாலட் செய்வது எப்படி, chicken salad recipe in Tamil, Tamil samayal kurippu

தேவையான பொருட்கள்

 • எலும்பில்லாத சிக்கன் : 300 கிராம்
 • உருளைக்கிழங்கு : 200 கிராம்
 • கருப்பு திராட்சை : 100 கிராம்
 • வெங்காய தாள் : 5
 • மாதுளை முத்துகள் : 1 கப்
 • வெண்ணெய் : 1 ஸ்பூன்
 • மயோனீஸ் : 1 கப்
 • ஆப்பிள் : 1
 • மிளகுத்தூள் : 1 ஸ்பூன்
 • கொத்தமல்லி, புதினா இலை : சிறிதளவு
 • உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை

 • துண்டுகளாக நறுக்கிய சிக்கனுடன் உப்பு, தண்ணீர் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து, பின் ஆறவிடவும்.
 • உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஆப்பிளையும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 • வாணலியில் வெண்ணெய் சூடானதும், வெங்காயத்தாளை பொரித்தெடுக்கவும்.
 • ஒரு பவுலில் பொரித்த வெங்காயத்தாள், துண்டுகளாக வெட்டிய ஆப்பிள், உருளைக்கிழங்கு மற்றும் வேகவைத்த சிக்கன் ஆகியவற்றை சேர்க்கவும்.
 • பின் கருப்பு திராட்சை, மாதுளை முத்துகள் , மயோனீஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அப்படியே அல்லது பிரிட்ஜில் வைத்து எடுத்த பின்னரோ, சுவைக்கலாம்.
Loading...
Categories: chicken receipies in tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors