சுவையான தேங்காய் பூ லேயர் கேக் செய்முறை, coconut layer cake recipe in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • கோதுமை மா –  180 கிராம்
  • சர்க்கரை – 240 கிராம்
  • பேக்கிங் பௌடர் – 2 தேக்கரண்டி
  • முட்டை –  4
  • வெண்ணெய் – 240 கிராம்
  • தேங்காய்த்துறுவல் 80 கிராம்

தேங்காய் க்ரீம் தயாரிக்கும் முறை

200 கிராம் வெண்ணெய்யுடன் 400 கிராம் தூளாக்கிய சர்க்கரை மற்றும் சிறிதளவு உலர்ந்த தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும்.இப்போது தேங்காய் க்ரீம் தயார்.

செய்முறை

*கோதுமை மாவுடன் பேக்கிங்பௌடர் கலந்து சலித்துக் கொள்ளவும்.

*வெண்ணெயையும் சர்க்கரையையும் நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.

*முட்டைகளை வெள்ளைக்கரு தனியாகவும் மஞ்சள் கருவை தனியாகவும் பிரித்து மிக்சியில் அடித்து கொள்ளவும்.

*அதன் பின் தேங்காய்த்துருவல் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் கோதுமை மா இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து மெதுவாக கிளறவும்.

*இந்த கலவையை கேக் வேக வைக்கும் 2 பாத்திரங்களில் வெண்ணெய் தடவி கோதுமை மா தூவி கோதுமை மா பரவுவதற்காக பாத்திரங்களில் லேஸாக தட்டவும்.

*மாவை ஊற்றிய பின் மா சமமாக பரவுவதற்காக லேஸாக தட்டிய பின் முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவனில் வைக்கவும்.

*1 மணிநேரம் ஆன பின் எடுத்து ஓரளவு ஆறியதும் ஒரு கேக் மீது தேங்காய் க்ரீம் தடவி மற்றொரு கேக்கை வைத்து கேக்கின்
பக்கங்களிலும் மேல் பகுதியிலும் தேங்காய் க்ரீம் தடவி துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors