சுவையான மட்டன் வறுவல் செய்வது எப்படி, tasty maddan varuval recipe in tamil, tamil samayal kurippu

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ

மசாலா செய்ய

 • மரசெக்கு நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
 • பட்டை – ஒரு துண்டு
 • இலவங்கம் – 2
 • ஏலக்காய் – 1
 • வரகொத்தமல்லி – 1 தேக்கரண்டி
 • குருமிளகு – 1 1/2 தேக்கரண்டி
 • வரமிளகாய் – 6
 • கசாகசா – 1 மேசைக்கரண்டி
 • நாட்டு சின்ன வெங்காயம் – 16
 • தேங்காய் துருவல் – 1/3 கப்
 • பூண்டு பற்கள் – 7

வறுவல் செய்ய

 • நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
 • வரமிளகாய் – 5
 • சோம்பு – 1/2 தேக்கரண்டி
 • சீரகம் – 1/2 தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் – 15 ( பொடியாக நறுக்கியது )
 • கறிவேப்பிலை – 3 கொத்து
 • தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது )
 • தூத்துக்குடி உப்பு தூள் – தேவையான அளவு
 • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை

 1. வடச்சட்டியில் மரசெக்கு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பட்டை , கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு வதக்கவும்.
 2. அதில் வரகொத்தமல்லி , குருமிளகு, சீரகம், சோம்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து சிறுதீயிலேயே நன்றாக மணம் வீசும் வரை வதக்கவும்.
 3. வடச்சட்டியில் இருப்பவை பொன்னிறமாக மாறியதும் அதில் கசாகசா சேர்த்து வதக்கவும்.
 4. அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
 5. அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அதற்கு பிறகு நன்றாக ஆறவைத்து ஆட்டுகல்லில் போட்டு நன்றாக மையாக விழுதாக சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மையாக ஆட்டவும்.
 6. வறுவல் செய்ய இரும்பு வடச்சட்டியை அடுப்பில் வைத்து மரசெக்கு நல்லெண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் சோம்பு , சீரகம் , சேர்த்து வதக்கவும்.
 7. அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 8. அதில் வரமிளகாயின் காம்புகளை உடைத்து அப்படியே போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
 9. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 10. அதில் தேவையான தூத்துக்குடி உப்பு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
 11. அதில் நன்றாக கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 12. அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி அதனுடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்கவும். அதில் தேவையான அளவு தூத்துக்குடி உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்.
 13. குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் ஆகும் வேகவைக்கவும். தேவையெனில் இடை இடையே தண்ணீர் வற்றினால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
 14. கறி நன்றாக வெந்ததும் அடுப்பை சிறுதீயிலேயே வைத்து குழம்பை நன்றாக சுண்ட விட்டு இடை இடையே மரசெக்கு நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். குழம்பு அனைத்தும் வற்றி கறி நன்றாக பொன்னிறமாக ஆனதும் இறக்கி சாம்பார் சாதத்துடன் பரிமாறவும்.
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors