சுவை மிகுந்த கோகோ கேக் செய்ய தயாரா…, tasty coco cake recie in tamil

தேவையான பொருட்கள்:

கோவா – 2 கப் (இனிப்பு இல்லாதது)
மைதா – ஒரு கப்
கோகோ பவுடர் – 5 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
நெய் – சிறிதளவு

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

மற்றொரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கோகோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி சமமாக பரப்பவும்.

நன்றாக ஆறிய பின் துண்டுகள் போடவும். கோகோ கேக் தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors