சூப்பரான அரிசி பொரி உப்புமா, Rice pori uppuma seimurai in tamil, tamil samayal kurippu in tamil

ஆயுத பூஜையில் மீந்து போன பொரியை வைத்து சுவையான உப்புமா செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான அரிசி பொரி உப்புமா
தேவையானப் பொருட்கள் :

அரிசி பொரி – 2 பெரிய கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1/4 கப்
எலுமிச்சம் பழம் – 1

தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – தேவைக்கு
கேரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லித் தழை – சிறிது

செய்முறை :

* ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பொட்டுக்கடலையைப் பொடி செய்துக் கொள்ளவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.

* பின் அதில் ஊறவைத்தப்பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

* எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

* சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.

Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors